இந்தியாவில் உள்ள 20-25 ஹெச்பிக்கு கீழ் உள்ள டாப் 10

May 29, 2024 | 20 mins read

பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயத்தை ஆதாரமாக கொண்டுள்ள ஒரு விவசாய நாடு இந்தியா. இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் விவசாயம் அல்லது அது சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு சம்பாதிக்கின்றனர். கணிசமான எண்ணிக்கையிலான விவசாயிகள் பொதுவாக ஒரு சிறிய நிலத்தை வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள நிலத்தின் சராசரி அளவு 2 ஹெக்டேருக்கு மேல் இல்லை. ஏக்கர் ஏக்கராக பரந்து விரிந்துள்ள விவசாய நிலங்களுக்கு கனகச்சிதமான, திறம் வாய்ந்த டிராக்டர்கள் ஆற்றும் பங்கு அபரிமிதமானது என்று சொன்னால் மிகை ஆகாது. விவசாய இயந்திரங்கள் துறையில் எல்லோருக்கும் தெரிந்த பெயரான மஹிந்திரா, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த மினி மான்ஸ்டர்களின் பல்வேறுபட்ட வகைகளை வழங்குகிறது. இவை பல்வேறு விதமான சிறிய விவசாய செயல்பாடுகள் மற்றும் உற்பத்தியை பெருக்குவதற்காக குழுவாக கூடி கலந்தாலோசித்து செயல்படுத்தும் வழிமுறைகளுக்கு ஏற்றவாறு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் 20-25 ஹெச்பிக்கு கீழ் உள்ள முதல் 10 மஹிந்திரா டிராக்டர்களைப் பார்ப்போம்.

மஹிந்திரா யுவராஜ் 215 NXT

YUVRAJ 215 NXT, 20 ஹெச்பி டிராக்டர்கள், சிறிய நிலங்களுக்கான உற்ற நண்பன். சக்திவாய்ந்த பல விதமான வேலைகளை செய்யக்கூடிய இந்த இயந்திரம் உங்கள் விவசாய பணிகளை சீராகவும், எளிதாகவும் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் 10.4 kW (15 ஹெச்பி) இயந்திரம் மென்மையானது மற்றும் செயல்திறன் அபரிமிதமானது. ஒவ்வொரு வேலையும் துல்லியமாக செய்யப்படுவதற்கும் உத்தரவாதம் அளிக்கிறது. இந்த சிறிய இயந்திரம் நிமிடத்திற்கு 2300 RPM (r/min) வழங்குவதோடுமற்றும் 778 கிலோ ஹைட்ராலிக்ஸ் தூக்கும் திறன் உடையது. இதன் ஆழம் மற்றும் நிலத்தினை அளக்கும் திறனின் மூலம் தானாகவே, 11.2 KW (15ஹெச்பி) இல் கூட துல்லியமாக நிலத்தடி நீரின் ஆழத்தை கணிக்கிறது,

மஹிந்திரா YUVRAJ 215 NXT NT

YUVRAJ 215 NXT NT, 20 ஹெச்பி டிராக்டர்களில், ஒரு சக்திவாய்ந்த மற்றும் திறன் வாய்ந்தது, அது அகலம் குறைவான (711 மிமீ) பாதையில் கூட செல்ல முடிவதால், உற்பத்தியை பெருக்குவதற்கான புதிய பல்வேறு விதமான செயல்பாடுகளுக்கு ஏற்றது. இந்த சிறிய ராட்சத எந்திரத்தில்10.4 கிலோ வாட்(15 ஹெச்பி) திறன் உள்ள எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மற்றும் எரிபொருள் குறைவாக செலவாகிறது. இதனால் இது விவசாயிகளுக்கு ஆகும் செலவை வெகுவாக குறைக்கிறது. 778 கிலோ வரை தூக்கும் திறன்கொண்டுள்ளது. இந்த வகையில் பல வகையிலான கியர்கள் கிடைக்கின்றன. யுவராஜின் இந்தப் வகை எந்திரத்தை, சாகுபடி, உழுதல், தெளித்தல் மற்றும் அதிக சுமைகளைத் தூக்குதல் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தலாம். அதனுடன் இதன் நிலப்பரப்பை சீராக்கும் திறனால், இது சீரற்ற நிலப்பரப்பில் வேலை செய்வதற்கு ஏற்றதாக அமைகிறது.

மஹிந்திரா JIVO 225 DI

14.7 kW (20 ஹெச்பி) இன்ஜின் சக்தி கொண்ட JIVO 225 DI டிராக்டர் அதன் ஆற்றல் மற்றும் நெகிழ்வுத்தன்மைக்கு மிகவும் பிரபலமானது. இந்த சிறிய இயந்திரம் 2-சக்கர-ஊர்தி ஆகும், தாழ்வான இருக்கைகள் மற்றும் அகலம் குறைவான பாதையில் செல்ல மிகவும் வசதியாக இருக்கும். அதன் உறுதியான வடிவமைப்பு எந்த பருவத்திலும் சக்தி வாய்ந்ததாக இயங்குகிறது. மற்ற பல செயல்பாடுகளுடன் கூடுதலாக, இழுத்தல், சாமான்களை கொண்டு செல்லுதல் மற்றும் உழுதல் போன்றவற்றிற்கும் பயன்படுகிறது. அதன் தானியங்கி வரைவு மற்றும் ஆழத்தை அளக்கும் சக்தியின் மூலம், கலப்பை மற்றும் உழவு செய்யும் கருவிகளுக்கான செயலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

மஹிந்திரா JIVO 225 DI 4WD

JIVO 225 DI 4WD, 20 ஹெச்பி டிராக்டர் பிரிவில், செயல்திறன் மற்றும் கட்டுப்பாட்டின் ஆற்றல் மையமாகும். 14.7 kW (20 ஹெச்பி) DI இன்ஜின் மைலேஜ் நன்றாக தருவதால் சிறந்ததை செலவு குறைகிறது. எரிபொருள்- குறைவாக தேவைப்படும் DI இன்ஜின் அதன் சக்தி மற்றும் கட்டுப்படுத்தும் தன்மையை உறுதி செய்கிறது, 2300 மதிப்பிடப்பட்ட RPM (r/min), மற்றும் 750 கிலோ ஹைட்ராலிக்ஸ் தூக்கும் திறன் ஆகியவை இதன் சீரான செயல்பாடுகளை உறுதி செய்கிறது. இந்த மினி சைத்தான் அதிக சுமைகளை இழுத்துக்கொண்டு குறுகிய நேரத்தில் நீண்ட தூரம் பயணிக்கிறது. அதிக எரிபொருள் திறன் தவிர, வசதியான இருக்கைகள் கொண்ட இந்த சிறிய இயந்திரம் வரைவு கட்டுப்பாடு, நிலத்தை உழுது தயார்படுத்துதல் ஆகியவற்றையும் செய்கிறது.

மஹிந்திரா JIVO 225 DI 4WD NT

ஜீவோ 225 DI 4WD NT, 20 ஹெச்பி டிராக்டர்கள், கரும்பு சாகுபடிக்கு ஏற்றது. 14.7 kW (20 ஹெச்பி) இன்ஜின்களுடன் 66.5 Nm சக்தியுள்ள டார்க்குடன் இருப்பதன் காரணமாக, மிகவும் கடிமான வேலைகளையும் எளிதாக செய்யும் திறன் பெற்றது. இது 750 கிலோஎடையை தூக்கும் திறன் கொண்டது. இந்த சிறிய அளவிலான சைத்தான் 770 மிமீ மட்டுமே குறுகிய அகலம் உள்ள பாதையில் கூட வேலை செய்ய ஏற்றது. சிறந்த-அதிக-அளவிலான மைலேஜ் கொடுப்பத்தோடு, குறைவான பராமரிப்பு தேவைப்படுகிறது, அதிக சேமிப்பு, எளிதாக மற்றும் குறைவான விலையில் இதன் உதிரி பாகங்கள் கிடைக்கும்.

மஹிந்திரா OJA 2121

OJA 2121 ஆனது விவசாயப் பணிகளுக்களை திறம்பட செய்வதற்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டுள்ளது. இதன் 13.42 kW (18 ஹெச்பி) PTO பவர் மற்றும் 76 Nm டார்க், இந்த இயந்திரம் விவசாய சாகுபடி செய்ய நல்ல தேர்வாகும். எந்தவிதமான விவசாய பணிகளுக்கும் இது சிறந்த தேர்வாகும். இந்த மினி சைத்தான் அகலம் குறைவாக உள்ளதால் கரும்பு மற்றும் பருத்தி, வரிசையில் நடப்படும் பயிர்கள் போன்ற அனைத்து பயிர்களையும் நடுவதற்கு ஏதுவாக நிலத்தை பண்படுத்தும் வேலைகளையும் செய்ய பயன்படுகிறது.

மஹிந்திரா OJA 2124

OJA 2124 நல்ல மைலேஜ் மற்றும் 25 ஹெச்பி டிராக்டர்களில் சிறப்பாக செயல்படுகிறது. 18.1 கிலோ வாட்ஸ்(24 ஹெச்பி) திறன் கொண்ட அதன் சக்திவாய்ந்த 3DI இயந்திரம் விவசாயிகளுக்கு சரியான தேர்வாக அமைகிறது. இபிடிஓ தானாகவே பிடிஓவை செயல்படுத்துகிறது மற்றும் நிறுத்துகிறது, அதே நேரத்தில் எலெக்ட்ரிக் வெட் பிடிஓ கிளட்ச் மென்மையான மற்றும் துல்லியமான செயல்பாடுகளை வழங்குகிறது. தெளிப்பான், ரோட்டாவேட்டர், உழவு, கலப்பை, விதை துரப்பணம் மற்றும் இது போன்ற பல கருவிகளுக்கும் மாற்றாக இந்த ஒரே இயந்திரம் இருக்கும்.

மஹிந்திரா JIVO 245 DI

JIVO 245 DI 4 வீல்-டிரைவ் டிராக்டர் 17.64 kW (24 ஹெச்பி) DI இன்ஜினை கொண்டுள்ளது. 2300 RPM (r/min) என மதிப்பிடப்பட்டது, இரண்டு சிலிண்டர்கள், பவர் ஸ்டீயரிங் மற்றும் 750 கிலோ ஹைட்ராலிக்ஸ் தூக்கும் திறன் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது இந்தியாவின் சிறந்த 4-வீல்-டிரைவ் இயந்திரங்களில் ஒன்றாகும், இது விவசாய நடவடிக்கைகளை திறம்பட செய்ய உதவுகிறது. அதன் வலிமையான உடல் மற்றும் சக்திவாய்ந்த செயல்திறனுக்காக அறியப்பட்ட இது, சிரமமில்லாத கனரக பயன்பாட்டை உறுதி செய்கிறது. தானியங்கு வரைவு மற்றும் ஆழக் கட்டுப்பாடு, கலப்பை மற்றும் உழவு போன்ற கருவிகளை கட்டுப்படுத்த உதவுகிறது. பழத்தோட்டங்கள், திராட்சைத் தோட்டங்கள் மற்றும் விதை தெளிக்கும் முன் நிலத்தை பண்படுத்தும் வேலைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மஹிந்திரா JIVO 245 வைன்யாரட்

JIVO 245 திராட்சைத் தோட்ட டிராக்டர் குறிப்பாக திராட்சைத் தோட்டங்கள், பழத்தோட்டங்கள் மற்றும் நிலத்தை பண்படுத்துவதற்கான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 25 ஹெச்பி உள்ள இந்த மினி சைத்தான், அதன் 17.64 kW (24 ஹெச்பி) இன்ஜின் சக்தி மற்றும் 4-வீல்-டிரைவ் திறனுடன் செயல்திறனின் ஆற்றல் மையமாக உள்ளது. இதன் பவர் ஸ்டீயரிங் மற்றும் 750 கிலோ ஹைட்ராலிக்ஸ் தூக்கும் திறனைக் கொண்டுள்ளது. அதன் பிடிஓ சக்தி 16.5 கிலோ வாட் (22ஹெச்பி) கரடு முரடான நிலங்களிலும் தங்கு தடையின்றி வேலை செய்கிறது. தானியங்கு வரைவு மற்றும் ஆழக் கட்டுப்பாடு, கலப்பை மற்றும் உழவு போன்ற கருவிகளை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த இயந்திரத்தின் மூலம், செலவைக் குறைக்கும் போது உங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கலாம். இது விவசாயத் துறையில் நம்பகமான இடத்தை பெற்றுள்ளது, மேலும் இது ஒப்பில்லாத செயல்திறன், ஆற்றல் மற்றும் மைலேஜ் ஆகியவற்றை வழங்குகிறது, குறைந்த முயற்சியில் நீங்கள் அதிகமாக மகசூல் ஈட்டலாம்.

மஹிந்திரா JIVO 305 DI 4WD

JIVO 305 DI 4WD, 25 ஹெச்பி டிராக்டர்களில், உங்களின் அனைத்து விவசாயத் தேவைகளுக்கும் உகந்த ஒன்றாகும். அதன் வலுவான 1489 CC இன்ஜின் மற்றும் 89 Nm இன் ஈர்க்கக்கூடிய டார்க்(முறுக்கு விசை) மூலம், இந்த சைத்தான் நீங்கள் கொடுக்கும் எந்த பணியையும் சிரமமின்றி கையாளும் திறன் கொண்டது. 18.3 கிலோ வாட் (24.5 ஹெச்பி) பிடிஓ பொருத்தப்பட்டுள்ளது, இது உங்கள் அனைத்து கருவிகளையும் திறம்பட இயக்குகிறது. இது 750 கிலோ எடையை தூக்கும் திறன் கொண்டுள்ளதால் நீங்கள் கனமான பொருட்களை வியர்வை சிந்தாமல் எளிதில் இதன் மூலம் தூக்கி செல்ல முடியும். இதில் மூடுபனி தெளிப்பான்களுடன் கிடைக்கிறது. 2 வேகமாக இயங்கும் பிடிஓக்கள் (590, 755) தெளித்தல், நனைத்தல், மேடுகளை குறைத்து நிலத்தை சமமாக்குதல் மற்றும் உழுதல் ஆகியவற்றை செய்கிறது.

மஹிந்திரா JIVO 305 DI 4WD வைன்யார்ட்

JIVO 305 DI 4WD திராட்சைத் தோட்டம், 25 ஹெச்பி டிராக்டர் பிரிவின் கீழ், திராட்சைத் தோட்டப் பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட இறுதி இயந்திரமாகும். அனைத்து கருவிகளையும் திறம்பட இயக்க 18.3 கிலோவாட் (24.5 ஹெச்பி) பிடிஓ சக்தியை இது வழங்குகிறது. திராட்சைத் தோட்டத்தின் குறுகலான பாதைகள் வழியாகச் செல்ல கச்சிதமான போனட், ஸ்டீயரிங் நெடுவரிசை மற்றும் ஃபெண்டரின் உயரம் உதவுகின்றது. இது 750 கிலோ தூக்கும் திறன் கொண்டது மற்றும் கூடுதல் இழுவைக்காக 4-வீல் டிரைவ் பொருத்தப்பட்டுள்ளது. இதில் மூடுபனி தெளிப்பான்கள், 2 வேகமான பிடிஓக்கள்(590, 755) தெளிப்பதற்கும், நிலத்தை தோண்டுவதற்க்கும், மேடுகளை குறைத்து சமமாக மாற்றுவதற்கும் மற்றும் உழுவதற்கு ரோட்டவேட்டர்களும் உள்ளது.

20-25 குதிரை திறன் கொண்ட மஹிந்திரா டிராக்டர்கள், இந்தியா முழுவதும் உள்ள சிறு-குறு விவசாயிகளின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, அதன் செயல்திறன் அவர்களின் நம்பிக்கைக்கு உகந்ததாகவும் இருக்கிறது. சிறிய நிலங்களை உழுதல், பொருட்களை கொண்டு செல்வது அல்லது விவசாய கருவிகளை இயக்குவது என எதுவாக இருந்தாலும், இந்த கச்சிதமான இயந்திரம் பல்வேறுபட்ட பணிகளை எளிதாக கையாளும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இது விவசாயிகளின் உற்பத்தித்திறனையும் லாபத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. இந்தத் தகவலுடன், உங்கள் பயன்பாட்டுத் தேவைகளின் அடிப்படையில் சரியான இயந்திரத்தைத் தேர்வுசெய்யுங்கள். மேலும் தகவல்களை பெற உங்கள் அருகில் உள்ள விநியோகஸ்தரை தொடர்பு கொள்ளவும். ஹேப்பி ஃபார்மிங்!

Connect With Us

நீயும் விரும்புவாய்