8 இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் 30-40 ஹெச்பி மஹிந்திரா டிராக்டர்கள்
இந்திய விவசாயிகள் மத்தியில் மஹிந்திரா டிராக்டர்கள் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இது பல தசாப்தங்களாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு சக்தி, உத்தரவாதம் மற்றும் புதிய தொழில் நுட்பங்கள் சார்ந்த விஷயங்களை வழங்கி வருகிறது. 30 முதல் 40 குதிரைத்திறன் கொண்ட இயந்திர வகைகளில், விவசாயிகளின் பல்வேறுபட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் தரமான இயந்திரங்களை இந்த நிறுவனம் வழங்குகிறது. இந்திய விவசாயத்தில் உற்பத்தித்திறனையும் செயல்திறனையும் அதிகப்படுத்தும் 8 அதிகம் விற்பனையாகும் மஹிந்திரா டிராக்டர் மாடல்கள் பற்றி அறிந்து கொள்வோம்.
மஹிந்திரா OJA 3132
OJA 3132 டிராக்டர், 30 முதல் 40 ஹெச்பி உள்ள டிராக்டர்களில், விவசாயத் துறையில் உங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்க சிறந்த தேர்வாகும். இது 23.9 கிலோவாட்ஸ்(32 ஹெச்பி) எஞ்சின் சக்தியுடன் வருகிறது. மற்றும் அதிகபட்ச செயல்திறனை உத்தரவாதம் அளிக்கும் புதுப்பிக்கப்பட்ட மற்றும் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. இபிடிஓ தானாகவே பிடிஓவை செயல்படுத்துகிறது மற்றும் நிறுத்துகிறது, அதே நேரத்தில் எலெக்ட்ரிக்கலி வெட் பிடிஓ கிளட்ச் மென்மையான மற்றும் துல்லியமான செயல்படுகிறது. மேலும், இது தரமான மூலப்பொருட்களையும் உள்ளடக்கியது, இதனால் வலிமையுடன் நீடித்து நெடு நாட்கள் வரை உழைக்கிறது. இதன் கச்சிதமான தன்மை, பழத்தோட்டம் மற்றும் பாக்கு சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது.
மஹிந்திரா 265 DI SP Plus Tuff Series
சக்திவாய்ந்த மற்றும் உறுதியான 265 DI SP பிளஸ் டஃப் சீரீஸ், விவசாய இயந்திரங்களின் உலகின் கேம்-சேஞ்சர். உற்பத்தித்திறன் மற்றும் வசதியை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட அம்சங்களுடன் உள்ளது,30 முதல் 35 ஹெச்பி பிரிவில் கணக்கிட்டு பார்த்தால், இந்த இயந்திரம் மிகச் சிறந்த புறக்கணிக்க முடியாத இடத்தை பிடித்துள்ளது. இது கடினமான சீரற்ற மேட்டு நிலங்களை எளிதில் சமாளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தினசரி மேற்கொள்ளும் கனரக செயல்பாடுகளைத் தாங்கும் அளவுக்கு வலுவான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. , நிலத்தில் நீண்ட நேரம் தொடர்ந்து செயல்பட அதன் 24.6 (33.0) ஹெச்பி எஞ்சின் உகந்த ஆற்றலை வழங்குகிறது. டூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங், சிறந்த- அம்சங்களுடன்-அதிகமான மைலேஜ், டிஐ என்ஜின் - எக்ஸ்ட்ரா லாங் ஸ்ட்ரோக் எஞ்சின் போன்ற மேம்பட்ட அம்சங்களைக் கொண்ட இந்த டிராக்டர் விவசாயிகளுக்கு ஒரு நல்ல அனுபவத்தை தருகிறது. நிலத்தை உழுது களையெடுத்து சீராக்கி பயன்படுத்துவது முதல், பொருட்களை இழுத்துச் செல்வது வரை, பல்வேறுபட்ட விவசாய பயன்பாடுகளில் சிறந்து விளங்குகிறது, இது விவசாயிகளுக்கு பிடித்ததாக உள்ளது. நீண்ட கால நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்புக்காக நிறுவனத்திடமிருந்து 6 வருட உத்தரவாதத்தை இதனுடன் சேர்த்து பெற்றுக் கொள்ளுங்கள்.
மஹிந்திரா XP PLUS 265 ஆர்சார்ட்
முற்றிலும் புதிய 265 XP பிளஸ் ஆர்சார்ட் விவசாயத்தின் மெகாஸ்டார் ஆகும். இந்த டிராக்டர் வலுவான மற்றும் நம்பகமான கட்டமைப்பைக் கொண்டுள்ளது, இது பழத்தோட்டங்களின் தேவைகளுக்கு ஈடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் 24.6 கிலோ வாட்ஸ் (33.0 ஹெச்பி) இன்ஜின் சக்தி மற்றும் 139 என்எம் டார்க்குடன், மரங்களுக்கு இடையே உள்ள இறுக்கமான இடைவெளிகளில் சிரமமின்றி பயணித்து, அதிகபட்ச உற்பத்தியை உறுதி செய்கிறது. இது அதிகபட்ச PTO சக்தியை வழங்குகிறது, இதனால் அதன் இயந்திர சக்தியை பரந்த அளவிலான இணக்கமான கருவிகளை இயக்க உங்களை அனுமதிக்கிறது. மேம்பட்ட ஹைட்ராலிக்ஸ், பவர் ஸ்டீயரிங் மற்றும் 49 லிட்டர் எரிபொருள் டேங்க் பொருத்தப்பட்ட இந்த இயந்திரம் விவசாயிகளின் கனவை நனவாக்குகிறது. ஹைட்ராலிக் அமைப்பு துல்லியமான கட்டுப்பாட்டை உறுதிசெய்கிறது, தடையற்று தொடர்ந்து வேலை செய்து உங்களுக்கு தேவையான விவசாயம் சார்ந்த விஷயங்களுக்கு சரியான சீரமைப்பை அளிக்கிறது. அதன் தோற்கடிக்க முடியாத சக்தி, துல்லியம் மற்றும் பொருந்தக்கூடிய தன்மை ஆகியவற்றின் கலவையானது உங்கள் பழத்தோட்ட விவசாய நடவடிக்கைகள் உற்பத்தி மற்றும் வெற்றியின் புதிய உயரங்களை நீங்கள் அடைவதை உறுதி செய்கிறது.
மஹிந்திரா OJA 3136
OJA 3136 ஆனது 26.8 கிலோ வாட்ஸ் (36 ஹெச்பி) எரிபொருள்-திறனுள்ள எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது வலிமையானது மற்றும் அனைத்து வகையான பயன்பாட்டிற்கும் இணக்கமானது. இபிடிஓ தானாகவே பிடிஓ வை செயல்படுத்துகிறது மற்றும் நிறுத்துகிறது, அதே நேரத்தில் எலெக்ட்ரிக்கல் வெட் பிடிஓ கிளட்ச் மென்மையான மற்றும் துல்லியமான செயல்பாடுகளை வழங்குகிறது. இது ஒவ்வொரு விவசாயியின் தேவைகளுக்கு ஏற்றவாறு சேவை செய்யும் உகந்த வடிவமைப்பை உள்ளடக்கியது. இது அனைத்து நிலப்பரப்புகளிலும் ஆல்-ரவுண்ட்டராக செயல்திறனை வழங்குவது போல் கட்டப்பட்டுள்ளது, இது பழத்தோட்ட சாகுபடி மற்றும் உழுதல்(புட்லிங்) போன்ற பல விஷயங்களுக்கு ஏற்றது.
மஹிந்திரா JIVO 365 DI 4WD
சமீபத்திய ஜப்பானிய தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு, புதிய JIVO 365 DI 4WD திராட்சைத் தோட்டங்கள் மற்றும் பழத்தோட்டங்களில் திறம்பட செயலாற்றும் நிபுணத்துவம் பெற்றது. மகிந்திரா நிறுவனத்தின் புகழ்பெற்ற சக்திவாய்ந்த 26.48 kW (36 ஹெச்பி) DI, மேம்பட்ட ஜப்பானிய டிரான்ஸ்மிஷன் மற்றும் ஹைட்ராலிக்ஸ் அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட 3-சிலிண்டர் DI இன்ஜின் ஒருங்கிணைந்த ஒரு கலவையாகும், இது கடினமான சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்படுகிறது. மற்ற டிராக்டர்களைப் போலல்லாமல், இது பெரிய தெளிப்பான்களை இழுக்கிறது மற்றும் ஈரமான சேற்று மண்ணிலும் 118 என்எம் டார்க்குடன் எளிதாக செயல்படுகிறது. நீங்கள் 8+8 பக்க ஷிப்ட் கியர் பாக்ஸ் மூலம் தேவையான வேகத்தை தேர்வு செய்யலாம், நிலத்தை செப்பனிடும் போது சிறப்பாக செயல்படுகிறது. கியர்களை மாற்றாமல் விரைவான முன்னோக்கி மற்றும் பின்தங்கிய பகுதிகளை எளிதாக இயக்குவதற்கு டிராக்டரின் சுலபமான ஒருங்கினந்த செயல்பாட்டு முறைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
மஹிந்திரா JIVO 365 DI 4WD Puddling Special
30 முதல் 35 ஹெச்பி டிராக்டர்களின் வகை நெல் வயல்களுக்கு சிறந்த துணையாக JIVO 365 DI விளங்குகிறது. இது 4 வீல் டிரைவ் மற்றும் பொசிஷன்-ஆட்டோ கன்ட்ரோல் (பிஏசி) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதல் இந்திய டிராக்டர் ஆகும், இது நெல் வயல்களில் ஆழத்தின் மீது மிகுந்த கட்டுப்பாட்டுடன் வேலை செய்வதற்கு ஏற்றதாக உள்ளது. பிஏசி தொழில்நுட்பம் மூலம், பிசி லிவரை சரிசெய்ய வேண்டிய அவசியம் இல்லாமல், ரோட்டாவேட்டர் உழுகின்ற நிலத்தின் ஆழத்தை சரிசெய்ய முடியும். இந்த சக்திவாய்ந்த ஆனால் இலகுரக 4-சக்கர 26.8 kW (36 ஹெச்பி) இயந்திரம், 2600 RPM (r/min) என மதிப்பிடப்பட்டுள்ளது. இது பவர் ஸ்டீயரிங் மற்றும் 900 கிலோ ஹைட்ராலிக்சை தூக்கும் திறன் கொண்டது. அதன் சுறுசுறுப்பான வடிவமைப்பு, சிறந்த- நல்ல- தரமான எரிபொருளை கொண்டு, செயல்திறன் அல்லது நீண்ட காலம் பழுதாகமல் உழைத்தல் ஆகியவற்றில் சமரசம் செய்யாமல் இருப்பதால் சிக்கனமான தேர்வாக அமைகிறது. இந்த 4x4 வகை அதன் உயர்ந்த சக்தி மற்றும் குறைந்த எடை காரணமாக அதிகமாக உள்வாங்கும் களிமண்னில் கூட சிறப்பாக செயல்படுகிறது, உழவு செய்வதில் எந்த குறையும் சொல்ல முடியாதபடி செயல்படுகிறது.
மஹிந்திரா 265 DI XP PLUS
30 முதல் 35 ஹெச்பி டிராக்டர் பிரிவில் 265 DI XP PLUS ஆனது, இந்த துறையின் பவர்ஹவுஸ் ஆகும். அதன் வலுவான 24.6 kW (33 HP) எஞ்சின் மற்றும் 137.8 என்எம் டார்க்குடன், இந்த இயந்திரம் எந்தவொரு விவசாய பணியையும் எளிதாக மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது அதிக சுமைகளை எளிதாக தூக்க முடியும். 1500 கிலோ ஹைட்ராலிக் தூக்கும் திறன் கொண்ட இந்த ஆல்ரவுண்டரால் அனைத்தையும் கையாள முடியும். மேலும் இந்த வசதியைப் பற்றி மறந்துவிடக் கூடாது - டூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் மற்றும் விருப்ப மேனுவல் ஸ்டீயரிங் மூலம், உங்கள் சவாரி சீராகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். உத்தரவாதமான மற்றும் நம்பகமான, இது ஆறு வருட உத்தரவாதத்துடன் வருகிறது - மற்ற எந்த நிறுவனத்திலும் இல்லாமல் முதன் முதலாக! முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதீத சக்தி மற்றும் தோற்கடிக்க முடியாத எரிபொருள் செயல்திறனை நீங்கள் அனுபவிக்க முடியும்.
மகிந்திரா 275 DI XP PLUS
அதிக அளவிலான விவசாய வேலைகளின் கடுமையை தாங்கும் வகையில் கட்டப்பட்ட, 275 DI XP PLUS ஆற்றல் நிரம்பிய செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை கொண்டுள்ளது. இதன் மூலமாக அதன் சக்தி மற்றும் கணிசமாக குறைந்த எரிபொருள் நுகர்வும் அறியப்படுகிறது. இந்த இயந்திரம் 27.6 கிலோ வாட்ஸ் (37 ஹெச்பி) ELS DI இன்ஜின் மற்றும் 146 என்எம் டார்க் உடையது. அதன் உயர் முறுக்கு(டார்க்) இயந்திரம் மற்றும் கனரக கட்டுமானம் பல்வேறுவிதமான தட்பவெட்ப பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளுக்கு நம்பகமான துணையாக அமைகிறது. வியக்கக்கூடிய அளவுக்கு 1500 கிலோ ஹைட்ராலிக்கை தூக்கும் திறன் கொண்ட இது அதிக சுமைகளை சிரமமின்றி கையாள முடியும். மற்றும் முன்பை விட வேகமாக பணிகளையும் முடிக்க முடியும். குறிப்பிடத்தக்க 24.5 kW (32.9 ஹெச்பி) பிடிஓ சக்தியுடன் பொருத்தப்பட்டுள்ளதால், இது பல விதமான பணிகளைச் சிறப்பாக செய்வதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. கூடுதலாக, இது மென்மையாக அதிர்வில்லாமல் நகர்தல், குறைவான பராமரிப்பு செலவு, நன்றாக இழுப்பதற்கான பெரிய டயர்கள் மற்றும் வசதியான இருக்கை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தொழில்துறையில் முதன் முதலாக இந்த டிராக்டர் ஆறு வருட உத்தரவாதத்தை வழங்குகிறது. இந்த டிராக்டர் ஒரு ஆல்ரவுண்டர் ஆகும், இது உங்களின் அனைத்து விவசாய தேவைகளையும் பூர்த்தி செய்யும் திறன் கொண்டது.
ஆற்றல் மிக்க விவசாய உலகில், மஹிந்திரா டிராக்டர்கள் இடைவிடாமல் புதுமை மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்கான பணிகளை அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செய்து வருகின்றனர். அதிகம் விற்பனையாகும் 30 முதல் 40 ஹெச்பி மாடல்கள், விவசாயிகளின் மேம்பாட்டையும, இந்தியாவில் விவசாயத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகின்றன. ஒப்பிடமுடியாத செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையுடன் உள்ள இந்த டிராக்டர்கள் வெறும் இயந்திரங்கள் மட்டுமல்ல, நிலையான விவசாய நடைமுறைகள் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான பயணத்தில் விலைமதிப்பற்ற பங்காளிகளாகவும் இருக்கின்றன. இந்தத் தகவல்களின் வாயிலாக, உங்கள் தேவைகளின் அடிப்படையில் சரியானதைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று நம்புகிறோம். விரிவான தகவலுக்கு உங்கள் அருகில் உள்ள விநியோகஸ்தரை தொடர்பு கொள்ளவும். ஹேப்பி ஃபார்மிங்!